Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா….”இத்தனை கோடியா”…. இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை நிதி மந்திரி….!!!

இலங்கை நிதி மந்திரி கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக இந்தியா  வர உள்ளார். 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசு வெளிநாடுகளில் இருந்து கடன் உதவி குறிப்பாக இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறது. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் மத்திய நிதி மந்திரி எஸ் ஜெய்சங்கருடன் இந்தியா இலங்கையில் மேற்கொள்ள எண்ணியுள்ள திட்டங்கள் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு நிதி மந்திரி பசில் ராஜபக்சே பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று நிதி மந்திரி பசில் ராஜபக்சே இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக புறப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்திய அரசுடன் ரூபாய் 75,000 கோடி கடன் உதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று கூறபடுகிறது. இந்த ஒப்பந்தம் இலங்கையின் மருந்துப் பொருள்கள் இறக்குமதி செலவை சமாளிக்க, உணவு மற்றும் எரிபொருள் போன்றவைகளுக்கு உதவும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |