போலந்து எல்லை பகுதி காவலர்கள், தங்கள் நாட்டிற்குள் உக்ரைனிலிருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நுழைந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
ரஷ்யப்படைகள், உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்கியதிலிருந்து ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இந்தியாவை சேர்ந்த மக்கள் 10,000 பேர் உட்பட ஒரு லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டு மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியிருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், போலந்து நாட்டின் எல்லை காவலர்கள், கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ரஷ்யப்படை, உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து முதல் தற்போது வரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.
உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் தங்குவதற்காக போலந்தில் தற்காலிகமாக முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்து நாட்டின் உள்துறை மந்திரியான மாரியுஸ் காமின்ஸ்கி, போரிலிருந்து தப்பி வரும் உக்ரைன் நாட்டு மக்களை போலந்து ஆதரிக்கும் என்று கூறியிருக்கிறார்