கமல்ஹாசனின் இளைய மகளான நடிகை அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு ரூபாய் 45 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை அக்ஷரா ஹாசன் உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகள் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன்பின்பு கடாரம் கொண்டானில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அக்ஷரா ஹாசன் தற்போது அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிப்பில் ரெடியாகும் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு இருக்க நடிகை அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு தொடர்புடைய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவருடைய சொத்து மதிப்பு மட்டுமே ரூபாய் 45 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.