இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான HCL தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், எச்சிஎல் தலைமை நிர்வாகி சி.விஜயகுமார் 2021 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.123.13 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா ஐடி நிறுவனங்களிலே அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகி விஜயகுமார் முதலிடத்தில் இருக்கிறார். 2022 ஆம் ஆண்டிலும் விஜயகுமாருக்கு இதே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 2021 ஆம் ஆண்டில் விஜயகுமார் மொத்த சம்பளம் 74% HCL உயர்த்தப்பட்டுள்ளது. மற்றொரு முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாகி சலீல் பரேக்கின் சம்பளம் சமீபத்தில் 88% உயர்த்தப்பட்டது. இதனால் அவருக்கான ஆண்டு சம்பளம் ரூ.79.75 கோடி உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் ஐடி தலைமை நிர்வாகி சலீல் பிரேக் என கருதப்பட்டார். தற்போது அவரையும் தாண்டி ரூ.123.13 கோடியுடன் முதலிடத்தை விஜயகுமார் பிடித்துள்ளார். மேலும் விஜயகுமார் தமிழகத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.