நமது நாட்டில் தற்போது 32.5 கோடி சிலிண்டர் இணைப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் கூறியிருந்ததாவது, “நமது இந்தியாவில் கடந்த 2014- ஆம் ஆண்டு 14 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் மட்டுமே இருந்தது. அதன்பின்னர் 2 ஆண்டுகள் கழித்து “உஜ்வலா” திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது 32.5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளது. இந்நிலையில் சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சமூக வலைதளங்களில் பிரச்சாரமும், பொதுமக்களிடையே நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
மேலும் ஒரு குடும்பத்திற்கு 12 சிலிண்டர் வழங்கப்படுகிறது. இதற்கு மானியமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை 33 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் நமது நாட்டில் 28 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்படவில்லை” என அவர் கூறியுள்ளார்.