கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்டத்திலுள்ள பி.இ.எஸ். தொழில்நுட்ப கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “4 வது தொழில் புரட்சி நமது வீடு கதவை தட்டுகிறது. இதற்கு அறிவாற்றல் கொண்ட பொருளாதார மற்றும் தடைகளைத் தாண்டிய புதிய தொழில்நுட்பங்கள் வளர்ச்சிதான் காரணமாக உள்ளது.
இந்த வாய்ப்பை நாம் எக்காரணம் கொண்டும் தவறவிடாமல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மாணவர்களை 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றார் போல திறன் பெற்றவர்களாக தயார்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் விவசாயம், கண்காணிப்பு, போக்குவரத்து, ராணுவம் மற்றும் சட்டத்துறை ஆகிய பல்வேறு துறைகளில் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் உதவியாக இருக்கும்.
இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தத் துறையில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வருகின்ற 10 ஆண்டுகளில் இந்தியா தனது பாரம்பரிய பலமான புதுமைகளை புகுத்தல், தொழில்நுட்பம் மற்றும் சிக்கன பொறியியல் ஆகியவற்றால் இந்தியா உலகம் குவிமையமாக மாறும்.
எனவே இந்தத் துறையின் வளர்ச்சிக்காக நாம் திறன்மிகக்க மனிதவளத்தை உருவாக்க வேண்டும் ம். இதன் வளர்ச்சிக்காக பாடப் பிரிவுகளில் மாற்றம் செய்ய வேண்டும். மேலும் வருகின்ற 2050 ஆம் ஆண்டுக்குள் பல லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்று இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது” என்று அவர் கூறினார்.