செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எப்படி தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு மூடுவிழா கண்டதோ இந்த விடியா திமுக அரசு அதே போல மடிக்கணினி திட்டத்திற்கு எப்படி மூடு விழா கண்டது, இருசக்கர வாகனத்திற்கு எப்படி மூடு விழா கண்டது, கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு மூடு விழா கண்டது,
அம்மாவின் உணவகத்தை மூடுவதற்கு எப்படி முயற்சி எடுக்கிறார்களோ, அதேபோல அம்மாவின் திருப்பெயரிலே இருக்கக்கூடிய குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம் என அம்மாவின் திருப்பெயரிலே இருக்கக்கூடிய அனைத்து நலத்திட்டங்களையும், சமூக பாதுகாப்பு திட்டங்களையும் மூடு விழா காண்கின்றது விடியா திமுக அரசு.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், சாமானிய முதல்வராக சரித்திரம் படைக்கின்ற எட்டப்படியார், இன்னைக்கு செல்லுகிற இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளத்திலே மகத்தான வரவேற்பை பெறுகின்றார். எங்கள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி அவர்களை வருக, வருக என்று மக்கள் வாழ்த்தி, வரவேற்கிற காட்சியை நாங்கள் பார்க்கின்ற போது…
அருள்மிகு பாலதண்டாயுதபாணி குடியிருக்கின்ற பழனி என்பதிலே மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், சாமானிய முதல்வராக, சரித்திரம் படைக்கின்ற அண்ணன் எடப்பாடி அவர்கள் வருகை தருகிற போது அங்கே மக்கள் கூடி நின்று எங்கள் முதல்வர் நிரந்தர முதல்வர் எடப்பாடியாரே வருக வருக என்று வரவேற்ற காட்சி…
எங்களுக்காக கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு கொடுத்தவர், எங்களுக்காக கொரோனா காலத்திலே நிவாரண முகாம்களை அமைத்தவர், இங்கே இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் எங்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர் அண்ணன் எடப்பாடியார் என்று அங்கே எழுப்பிய அந்த முழக்கங்கள் நம்பிக்கை முழக்கத்தினுடைய அடையாளமாக இருந்தது. ஆகவேதான் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் தொடர்ந்து இந்த அரசை வலியுறுத்தி வருகிறார்கள் என தெரிவித்தார்.