Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா இவ்வளவா…? கரை ஒதுங்கிய மீன் குஞ்சுகள்…. வலை வீசி பிடித்த மக்கள்…. காரணம் என்ன….??

வாய்க்கால் பகுதியில் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகள் கரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா, முல்லைத்தீவில் உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் இன்று திடீரென பல லட்சம் மீன் குஞ்சுகள் கரை ஒதுங்கி இருக்கின்றன. நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த மீன்குஞ்சுகள் உயிருடன் வாய்க்காலில் வந்து கரை ஒதுங்கியுள்ளன. உயிருடன் கரை ஒதுங்கிய இந்த மீன் குஞ்சுகள் கெழுத்தி இன மீன் வகையைச் சார்ந்த குஞ்சுகள் ஆகும்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் அதிசயதோடு இந்த மீன் குஞ்சுகளை பார்வையிட்டுள்ளனர். மேலும் வலை கொண்டு வந்து அந்த மீன்களை பிடித்து சென்றுள்ளனர்.

Categories

Tech |