Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடேங்கப்பா…! இவ்வளவு கோடியா ? மொயீன் அலியை வாங்கிய CSK…!!

இங்கிலாந்து வீரர் மொயீன் அலியை 7கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறக்கூடிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது சீசனுக்கான வீரர்கள் ஏலம்  சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 14 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. இதனால் இந்த ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இந்த வருடம் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு மொத்தம் இருக்கக்கூடிய 8 அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை சமீபத்தில் அனுப்பி இருந்தார்கள்.

இன்றைய தினம் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் தொடங்கி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக 1114 வீரர்கள் பதிவு செய்த நிலையில், அதில் 292 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான ஏலம் தொடங்கி இருக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 வீரர்கள் உட்பட மொத்தம் 164 இந்திய வீரர்களும், 65 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 292 வீரர்கள் இருக்கிறார்கள். முதல் வீரராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆரோன் பின்ச் ஏலம் விடப்பட்டு இருக்கிறார்.

சென்னை கிண்டியில்  இருக்கக்கூடிய நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் ஏலத்தில்  ஒவ்வொரு அணியும், அணியில் உள்ள நிர்வாகிகள் பங்கேற்று இருக்கிறார்கள். தொடர்ந்து ஏலம்  நடைபெற்று வருகிறது. இதில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரைக்கும் மொத்தம் அவர்களிடம் 19 கோடி வரை கைவசம் இருக்கிறது. இன்று நடைபெறக்கூடிய ஏலத்தில் புதிதாக 6 வீரர்களை சிஎஸ்கே அணி எடுக்க இருக்கிறது.

இதில் முதல் வீரராக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 கோடி ஏலத்தில் எடுத்துள்ளது. இவரை எடுக்க சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அதேபோல் ஷாகிப் அல் ஹசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Categories

Tech |