Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… இவ்வளவு கோடியா?…. திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு வெளியீடு…..!!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பணகையிருப்பு மற்றும் தங்க இருப்பு போன்றவை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடபட்டுள்ளது. அந்த வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 10.3 டன் தங்கம் மற்றும் ரூ.15,938 கோடி பணம் பெடாசிட்செய்யப்பட்டு இருக்கிறது. கோவிலின் உபரி வருமானத்தை ஆந்திர அரசின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை.

இதை பக்தர்கள் யாரும் நம்பவேண்டாம். இதற்கிடையில் உபரிவருமானம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் டெபாசிட் செய்யப்படும். வங்கிகளில் வெளிப்படையான முறையில்தான் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. கோவிலின் மொத்த சொத்து ரூபாய்.2.26 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |