பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் கடந்த ஆண்டு பிரிட்டன் அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர்.முன்னதாக இவர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரக்கணக்கான இருக்கலாம் என்று அறிக்கைகள் வெளியிடப்பட்டது. ஆனால் போர்ப்ஸ் இது பற்றிய தெரிவித்ததாவது அவர்களின் சொத்து மதிப்பு வியக்கத்தக்க வகையில் குறைவாகவும் இல்லாமல், அதிகமாகவும் இல்லாமல் ,நடுநிலையாக உள்ளதாக கூறினர். ஹரி மட்டும் தனது மறைந்த தாயான இளவரசி டயானாவிடமிருந்து 10 மில்லியன் டொலர் பெற்றதாக போர்ப் குறிப்பிட்டுள்ளது.
இதை தொடர்ந்து மேகன் தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்கள் மூலமாக 2மில்லியன் டாலர்கள் சம்பாதித்ததாக கூறப்படுகிறது . அமெரிக்கா சென்ற பின் தம்பதியினர் 14.7 மில்லியன் டாலருக்கு கலிஃபோர்னியாவின் சாண்டா பார்பரா கவுன்டியில் மாளிகை வாங்கியுள்ளனர். அந்த மாளிகைக்காக 5 மில்லியன் டாலர் செலுத்தி இப்போது கிட்டத்தட்ட 10 மில்லியன் டொலர் அடமானம் வைத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதியினர் frogmore காட்டேஜ் என்ற 17 ஆம் நூற்றாண்டின் அரச மாளிகையை புதுப்பிக்க செலவழித்த மூன்று மில்லியன் டாலர்களை திருப்பி கொடுத்துள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு frogmore காட்டேஜில் ஹரி -மேகன் தம்பதிகள் குடியேற முடிவு செய்தனர். ஆனால் தற்போது இந்த தம்பதியினரிடம் 4 மில்லியன் டாலர் தான் இருப்பதாக போர்ப்ஸ் கூறுகிறது. மேலும் netflix உடனான ஒப்பந்தம் மூலம் 100 மில்லியன் டாலர் வரை வருமானம் வரும் என்று கூறப்படுகிறது . முக்கிய நிகழ்வுகளில் ஹரி -மேகன் தம்பதிகள் கலந்து கொள்வதால் பயனடைவதாக போர்ப்ஸ் கூறகிறது. இளவரசர் ஹரி கடந்த வசந்த காலத்தில் மியாமியில் நடந்த ஜே.பி மோர்கன் உச்சி மாநாட்டில் பேசியதற்காக 1 மில்லியன் டாலர் பெற்றதாக கூறப்படுகிறது.