உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக சியாச்சின் பனிமலை காணப்படுகிறது. இந்த பனிமலை 23 ஆயிரம் அடி உயரம், 75 கி.மீ. நீளமும், 10 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டது. இங்கு ஹெலிகாப்டர்கள் உதவியுடன் வீரர்கள் சென்று அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஹெலிபேடில் இறங்க வேண்டும். அதிக குளிரால் சமையல் செய்வதும் கடினம் வாய்ந்தது. அதுமட்டுமில்லாமல் சியாச்சினிலிருந்து திரும்பிய வீரர்கள், எடை இழப்பு, அதிக தூக்கம், ஞாபக மறதி மற்றும் பாலியல் சக்தி குறைதல் ஆகியவை ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர். சியாச்சினில் இந்திய அரசு ஒவ்வொரு நாளும் ரூ.6 கோடி வரை செலவிடுகிறது. ஆண்டுக்கு ரூ.2190 கோடி செலவிடுகிறது.
அதனைத்தொடந்து சியாச்சினில், குறைந்த ஈரப்பதம், தீவிர குளிர், புற ஊதா கதிர்வீச்சு ஆகியவை காணப்படுகிறது. வீரர்கள் எப்போதும் பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடும் சூழ்நிலை காணப்படுகிறது. தூய குடிநீர் கிடைப்பதும் சிரமம். தற்காலிக கூடாரங்களில், எதிரிகளின் தாக்குதலை எப்போதும் சந்திக்க தயார் நிலையில் இருக்க வேண்டியது ஆகியவற்றை இந்திய வீரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கிடையில் இவ்வளவு உயரத்தில் இருந்தபோதும், கடும் குளிரிலும் பாகிஸ்தான் படை வீரர்களை எதிர்கொள்ள தயாராக உள்ள சூழலில், உலகின் மிக உயர்ந்த போர் முனையான சியாச்சினில் இந்திய ராணுவ வீரர்கள் தேசிய கொடியை இன்று ஏற்றியுள்ளனர். அதற்கு வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர். அதன்பிறகு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. மேலும் இந்த வீடியோவையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.