உலகிலேயே அதிக மக்கள் பின்தொடர்வோரை கொண்ட டிக் டாக், யூடியூப் பிரபலம் என்ற பெருமையை செனகல் நாட்டை சேர்ந்த காபே லேம் பெற்றுள்ளார்.
அமெரிக்க நாட்டை சேர்ந்த சார்லி டி அமிலியோ என்ற பெண் யூடியூபில் அதிக பின்தொடர்வோரை கொண்டவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இவருக்கு 18 வயதாகிறது. இந்நிலையில் காபே லேம் என்பவர் அந்தப் பெண்ணை முந்தியுள்ளார். செனகல் நாட்டை சேர்ந்த காபே லேம் தற்போது இத்தாலி நாட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் இத்தாலியில் தொழிற்சாலை ஒன்றில் இயந்திர கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பொது முடக்கத்தால் அவர் வேலையை இழந்தார். கொரோனா கட்டுப்பாடுகளால் அறையிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளபோது பொழுதுபோக்காக டிக் டாக் வீடியோக்கள் செய்ய ஆரம்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து யூடியூபில் உள்ள பிரபலமான வீடியோக்களுக்கு முகபாவனைகள் மூலம் நகைச்சுவை உணர்வுடன் அவர் பதிவிடும் பதில் வீடியோக்கள் இப்பொழுது உலகம் முழுக்க உள்ள ரசிகர்களை ஈர்த்துள்ளது.