Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா.. என்ன ஒரு நடிப்பு…? கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டி நாடகமாடிய பெண்… அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…!!!!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியைச் சேர்ந்த மகேஷ் (30) என்பவருக்கும், ஷில்பா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. மகேஸ் ஷில்பா தம்பதியினர் கோனை குண்டா எனும் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஷில்பா ஆண் நண்பர் ஒருவருடன் கணவருக்கு தெரியாமல் உல்லாசமாக ஊர் சுற்றியதாக தெரிகின்றது. இந்த விவகாரம் கணவர் மகேஷ்க்கு தெரிந்த பின்னர் இது பற்றி மனைவி சில்பாவிடம் கேட்டிருக்கின்றார் நண்பர் என கூறி சமாளித்துள்ளார். ஆனாலும் இது தொடர்பாக கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் ஷில்பா கடந்த இரண்டாம் தேதி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார் அதன் பின் வலிப்பு நோயால் கணவன் உயிரிழந்து விட்டதாக மகேஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றார்.

மேலும் கார் மூலமாக சடலத்தை மண்டியாவிற்கு எடுத்துச் சென்றுள்ளார். பெற்றோர் வந்து பார்த்தபோது மகேஷின் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் மண்டியா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். மேலும் மகேஷின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஷில்பாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் அப்போது திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்ததாகவும் அவரை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மகேசை திருமணம் செய்து வைத்ததாகவும் அவருடன் வாழ விருப்பமில்லை என்ற காரணத்தினால் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஷில்பாவை கைது செய்த போலீஸர் தலைமறைவாக இருந்த காதலனையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |