பிரபல சீரியல் நடிகை ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி கடந்த 2 வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 நாட்கள் ஆகியும் சமூக வலைதளங்களில் ரவி மற்றும் மகா திருமண பற்றிய செய்திகள் தான் பரபரப்பாக பேசப்பட்டுகிறது. அதன் பிறகு ரவீந்தரை பணத்திற்கு ஆசைப்பட்டு தான் மகாலட்சுமி குண்டாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருமணம் செய்துள்ளதாக தொடர்ந்து சிலர் கூறிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் ரவீந்தர் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமி சமீபத்தில் நடந்த ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.
அவர் நான் ரவீந்தரை பணத்திற்காக ஆசைப்பட்டு தான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறுகிறார்கள். அவர் ஒரு தயாரிப்பாளராக இருப்பதால்தான் அப்படி கூறுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதுவே சாதாரண ஒரு ஆளாக இருந்து ரவீந்தர் மாதிரி என்னிடம் பேசி இருந்தால் கூட நான் கண்டிப்பாக திருமணம் செய்து இருப்பேன். என்னுடைய கணவர் ஒரு தயாரிப்பாளராக இருப்பது தான் தற்போது எனக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நான் மாதம் 3 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கிறேன் என்று கூறினார். மேலும் இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மாதம் 3 லட்சம் சம்பாதிக்கும் மகா எதற்காக ரவீந்தரை பணத்திற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பியதோடு, ரவீந்தரை உண்மையாகத்தான் காதலித்து திருமணம் செய்திருக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.