பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி இப்போது “டிக்கெட் டூ பாரடைஸ்” என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். இத்திரைப்படம் உலகம் முழுதும் விரைவில் திரைக்குவர இருக்கிறது. இவற்றில் ஜார்ஜ் குளூனிக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் நடித்து இருக்கிறார். அமெரிக்க நாட்டில் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் ஜார்ஜ் குளூனியும், ஜூலியா ராபர்ட்சும் இணைந்து பங்கேற்று வருகிறார்கள்.
இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள முத்த காட்சி ஒன்றை படமாக்கிய அனுபவங்களை ஜார்ஜ் குளூனி சுவாரஸ்யமாக பகிர்ந்தார். இது தொடர்பாக ஜார்ஜ் குளூனி கூறியதாவது “இப்படத்தில் இடம்பெற்ற ஒரு முத்த காட்சியை படமாக்க 80 டேக்குகள் எடுத்தனர். இதை எனது மனைவிடம் சொன்னதும் அப்படியா என்று கேட்டு ஆச்சரியமானார். உடனடியாக நான் ஆமாம் முத்த காட்சிக்காக எடுத்த 79 டேக்குகளில் சிரித்து விட்டோம். இறுதியில் 80வது டேக்கில்தான் முத்த காட்சியில் நடித்து முடித்தேன் என தெரிவித்தேன்” என கூறினார்.