Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! ஒரு விளம்பர படத்திற்கு இவ்வளவு சம்பளமா….? வேற லெவல் தா போங்க….!!!

நடிகர் மகேஷ் பாபு விளம்பர படத்தில்  நடிப்பதற்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்திய அளவில் நடிகர் மகேஷ் பாபு மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். மேலும் இவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வெற்றி பெறுகிறது. தற்போது பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் சர்க்காரு  வாரி பாட்டா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.

தற்போது  மகேஷ்பாபு நடித்த குளிர்பான விளம்பரம் பெரிய அளவில் எடுக்கப்பட்டு வெளியாகி இருந்தது. இந்நிலையில் அந்த விளம்பரப் படத்திற்காக நடிகர் மகேஷ்பாபு வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் அந்த விளம்பரத்தில் நடிப்பதற்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

Categories

Tech |