ஒரே ஆதாரை வைத்து பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் 600 கடன்கள் வரை வழங்கப்பட்டு தில்லுமுல்லு நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஐ.பெரியசாமி, அதிமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவு சங்கங்களில் புற்றுநோய் போல முறைகேடு நடந்துள்ளது. நிலத்தின் மதிப்பை காட்டிலும் அளவுக்கதிகமான பயிர்கடன்கள் வழங்கப்பட்டு இருப்பதும், போலி நகைகளை அடகு வைத்து நகைக்கடன் பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரே ஆதார் எண்ணை வைத்து ஒருவர் பல கூட்டுறவு சங்கங்களில் பல லட்சம் ரூபாய் கடன் பெற்ற்றுள்ளனர்.
இந்த முறைகேடுகளை தடுப்பதற்காக விரைவில் கூட்டுறவு சங்கங்களை, மத்திய கூட்டுறவு சங்கங்களோடு இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.