கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருக்கிறார். இவர் தன்னுடைய நடவடிக்கைகளால் பொதுமக்களின் மத்தியில் கவனம் பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் கவனத்தில் என்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இருப்பதாக திமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். கோவை மேயர் உட்க்கட்சி பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய கடமைகளை செய்வதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்.
அந்த வகையில் காந்தி மா நகரில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம், அம்பாள் நகரில் நகர்நல மைய கட்டுமானம், எம்ஜிஆர் நகரில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளியில் 74.95 லட்ச ரூபாயில் நவீன வகுப்பறைகள், ஷாஜகான் நகரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 75 லட்ச ரூபாயில் நவீன வகுப்பறைகள், பயனீர் மில்ரோடு கார்ப்பரேஷன் பள்ளியில் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கழிவறைகள், மணியக்காரன்பாளையம் கார்ப்பரேஷன் மேல்நிலைபள்ளியில் 99.10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள், ராமசாமி நகர் கார்ப்பரேஷன் மேல்நிலைப் பள்ளியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் போன்றவற்றிற்கு நேற்று அடிக்கல் நாட்டினார்.
அதன்பிறகு பள்ளியில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்து அவற்றின் தரத்தை உயர்த்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சில இடங்களில் சிறிய பாலங்கள் மற்றும் கழிவு நீர் வடிகால்கள் போன்றவற்றை திறந்து வைத்த மேயர், பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வைப்பதற்கு வசதியாக 2 விதமான குப்பை தொட்டிகளை வழங்கினார். மேலும் மேயரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.