Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! ஒரே நேரத்தில் இத்தனை கோவில்களா…..? குறைந்த செலவில் ஆன்மீக சுற்றுலா….. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு….!!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக மக்கள் தெய்வ வழிபாட்டின் மீது அதிக நம்பிக்கை கொண்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவதில் அதிக விருப்பம் கொண்டிருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் சுற்றுலா துறையுடன் இணைந்து பொதுமக்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியது. அதன்படி கடந்த ஆடி மாதம் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த வகையில் தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு வைணவ கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சென்னை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைணவ கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இந்த ஆன்மீக சுற்றுலாவின் போது சென்னையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், ஆதிகேசவ பெருமாள் கோவில், வைத்திய வீரராகவ பெருமாள் கோவில், பொன் சாமி பெருமாள் கோவில், நீர் வண்ண பெருமாள் கோவில், பார்த்தசாரதி கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவில், சிங்கப் பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சமய கோவில், நித்ய கல்யாண பெருமாள் கோவில், அஷ்டலட்சுமி கோவில் போன்ற கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இதேபோன்று திருச்சி மாவட்டத்தில் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ராம பெருமாள் கோவில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசல பெருமாள் கோவில், புருஷோத்தம பெருமாள் கோவில், உத்தமர் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில், உறையூர் அழகிய மணவாளநாத பெருமாள் கோவில் போன்றவைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அதன் பிறகு தஞ்சாவூரில் வடுவூர் கோதண்ட ராம சுவாமி திருக்கோவில், மன்னார்குடி ராஜ கோபால சுவாமி திருக்கோவில், திருச்சேறை சாரதநாதா பெருமாள் திருக்கோவில், நாச்சியார் கோவில், சீனிவாச பெருமாள் திருக்கோவில், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் பெருமாள் திருக்கோவில், கும்பகோணம் சங்கரபாணி பெருமாள் திருக்கோவில், திருக்கண்டியூர் சாப விமோசன பெருமாள் திருக்கோவில் போன்றவைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.  இதனையடுத்து மதுரை மாவட்டத்தில் கூடலழகர் பெருமாள் திருக்கோவில், திருக்கோஷ்டியூர் சவும்ய நாராயண பெருமாள் திருக்கோவில், திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோவில், ஒத்தக்கடை ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் திருக்கோவில், கள்ளழகர் மற்றும் அழகர் கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இந்த சுற்றுலாவானது பக்தர்களின் வசதிக்காக குறைந்த கட்டணத்துடன், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு பக்தர்களுக்காக கட்டணமில்லா சிறப்பு தரிசனம் மற்றும் பிரசாதம் போன்றவைகளும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவிற்கு செல்ல விரும்புபவர்கள் www.ttdconline.com என்ற சுற்றுலா துறையின் இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-254333333, 25333444 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |