ஓணம் பண்டிகை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக ஓணம் பண்டிகை கொண்டாடப் படவில்லை. இந்த வருடம் கொரோனா தொற்று குறைந்ததால் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை மக்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.
இந்த பண்டிகையை ஒட்டி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 624 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்லத்தில் மட்டும் 1 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. இந்த தகவலை மதுபான விற்பனை கழக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.