இந்தியாவில் 2022-ல் அதிக முறை உணவு ஆர்டர் செய்த நபருக்கு Zomato நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய உணவுப் பிரியர் 2022 என்ற பட்டத்தை கொடுத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான நபர்கள் வீட்டில் உணவு சமைப்பதை விட ஆன்லைனில் தான் ஆர்டர் செய்கிறார்கள். உணவு ஆர்டர் செய்வதில் zomato செயலி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது.
இந்நிலையில் Zomato செயலியில் டெல்லியை சேர்ந்த அங்கூர் என்ற நபர் தினந்தோறும் 9 ஆர்டர்கள் வீதம் ஒரு வருடத்திற்கு 3330 முறை உணவு ஆர்டர் செய்துள்ளார். இவர்தான் இந்தியாவிலேயே அதிக முறை உணவு ஆர்டர் செய்த நபர் என்ற பெருமையை பிடித்துள்ளார். மேலும் Zomoto-வில் அதிக முறை ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.