இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் இலங்கைக்கு நீந்தியவாறு இலங்கை விமானப் படை வீரர் ரோஷன் சாதனை படைத்துள்ளார்.
இலங்கையின் விமானப்படை வீரரான ரோஷன் அபிஸ் பல நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்ட ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளார். அதை தொடர்ந்து இலங்கையை சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 வருட கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் வரை ரோஷன் அபிஸ் தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்தார்.
தலைமன்னர் ஊர்முனை கடலில் குதித்து நீந்தியவாறு துவங்கியவாறு இலங்கை கடலோர பாதுகாப்பு படை உதவியுடன் தனுஷ்கோடி அரிச்சல்முனையை வந்தடைந்தார். தொடர் நீச்சல் பயணத்திற்கு பிறகு ரோஷன் மீண்டும் இலங்கை தலைமன்னாருக்கு சென்றடைந்தார். முதன் முதலாக இலங்கை விமானப்படை வீரர் ஒருவர் 56 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி சாதனை படைத்துள்ளார்.