Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு புடவையில் கெத்தாக கால்பந்து விளையாடிய எம்பி…. செம வைரல்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியைச் சேர்ந்தவர் எம்பி மஹுவா மொய்த்ரா. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் கிருஷ்ணா நகர் எம்பி கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் எம்பி மஹுவா மொய்த்ரா கலந்து கொண்டு சேலையுடன் கால்பந்து விளையாடியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை எம்பி தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து,  இது வேடிக்கையான தருணம் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கால்பந்து போட்டியை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் கால்பந்து போட்டி நடைபெற்ற சமயத்தில் எம்பி மஹுவா கலந்து கொண்டு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Categories

Tech |