தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் இந்தி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பத்திரிக்கையாளர் ஒருவர் நீங்கள் ஏன் இந்தி சினிமாவில் நடிப்பதில்லை என கேட்ட பொழுது நட்சத்திர அந்தஸ்து இங்கே தான் இருக்கின்றது எனவும் தெலுங்கு சினிமாவில் நடிப்பதுதான் தனக்கு கம்பிடபிளாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு பாலிவுட்டில் நடிக்கும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து பாலிவுட் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் தன்னிடம் பேசியதாகவும் ஆனால் அவர்களை நிராகரித்து விட்டதாக கூறியுள்ளார்.
மேலும் ஹிந்தியில் தனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாது என கூறியிருந்த நிலையில் தற்பொழுது அவர் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார் என்று கேள்வி எழுந்திருக்கின்றது. மகேஷ்பாபு இதுவரை 60 கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில் அண்மையில் சம்பளத்தை உயர்த்தி 80 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் மகேஷ்பாபு ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படத்திற்கு 100 கோடி சம்பளம் வழங்க உள்ளதாக கூறப்படுகின்றது. பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான், அக்சய்குமார் ஆகிய முன்னணி நடிகர்கள் ஒரு படத்துக்கு 80 கோடி வரையில் தான் சம்பளம் வாங்குவதால் மகேஷ்பாபு அப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.