குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் . இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். அண்மையில் இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது சம்பளத்தை கூட்டியுள்ளதாக திரைவட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாக வெற்றி இல்லாமல் இருந்த சிம்புவுக்கு கடைசியாக வெளியான மாநாடு, VTK இரண்டுமே படு ஜோராக ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த ஜூனியர்களே சம்பளத்தை ஏற்றிவிட்டனர், நாம் ஏன் ஏற்றக்கூடாது என ஒரு பட சம்பளத்தை 330 Cக்கு உயர்த்தியுள்ளராம் சிம்பு. இனிமே என்ன வெறித்தனம்தான்.