Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! சிலம்பம், கபடி, நடனம் என அனைத்திலும் சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வல்லம் பகுதியில் ரவி- உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் வர்ஷா(20) தஞ்சை மன்னர் சரபோஜி கலைக்கல்லூரியில் 3- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வர்ஷா கடந்த 3-ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த மாதம் சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வர்ஷா முதலிடம் பிடித்தார்.

மேலும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற போட்டியில் 1 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி வர்ஷா உலக சாதனை படைத்துள்ளார். இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் பொள்ளாச்சியில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியிலும், கடந்த மாதம் கோவாவில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியிலும் வர்ஷா தலைமையிலான அணி முதலிடம் பிடித்தது. நடன போட்டியிலும் வர்ஷா வெற்றி பெற்றுள்ளார். சிலம்பம், கபடி, நடனம் என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்த மாணவியை விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |