Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. சொகுசு வீடு… தங்க-வைர நகைகள்…. பூர்ணாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்….!!!!!

தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடிவீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி ஆகிய படங்களில் நடித்துள்ள பூர்ணா, சில நாட்களுக்கு முன் துபாய் தொழிலதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நடிகர்-நடிகைகள் பல பேரும் சமூகவலைத்தளத்தில் வாழ்த்து கூறினர்.

இப்போது அவர் கணவர் உடன் துபாயில் குடியேறி இருக்கிறார். இந்த நிலையில் பூர்ணாவுக்கு அவரது கணவர் விலையுயர்ந்த பொருட்களை திருமண பரிசாக வழங்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. துபாயில் பெரிய சொகுசு வீடு ஒன்றை பூர்ணாவிற்கு பரிசாக கொடுத்திருக்கிறார். அத்துடன் 1,700 கிராம் தங்க-வைர நகைகளையும் பரிசாக வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |