Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…..திருப்பதியில் பிரம்மோற்சவ விழா 2022….. 427 முகங்கள், 27 ஜோடிகள்…… ஏழுமலையானுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ்….!!!

தமிழர்களுக்கு பட்டுப் புடவை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் மட்டும் தான். இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் உலகப் புகழ்பெற்றது. காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் கோவில் தோப்பு தெருவில் குமாரவேலு- கலையரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டுச்சேலை வடிவமைப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் மூன்றாவது ஆண்டாக திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரமோற்சவம் விழாவிற்கு பெருமாளுக்கு சமர்ப்பிக்க வித்தியாசமாக பட்டுச்சேலை தயாரித்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.அதன்படி பட்டுச்சேலையில் பெருமாளின் முகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் லட்சுமி தேவியை வடிவமைத்து தர அந்த தம்பதியினர் முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து இரவு, பகலாக கடந்த எட்டு நாட்களாக நான்கு நெசவாளர்கள் ஒன்று சேர்ந்து 192 மணி நேரம் உழைத்து பட்டுச்சேலை நெசவு செய்து தயாரித்துள்ளனர். அரக்கு கலர் கோறா பட்டில், தக்காளி கலர், தங்க ஜரிகை இலைகளால் நெசவு செய்து, 21 1/2 முழம் நீளத்தில் ஒரு கிலோ 386 கிராம் எடையில் நெசவு செய்துள்ளனர். இந்த சேலையின் உடலில் 427 பெருமாளின் திருமுகங்களும், படடில் 27 ஜோடி யானைகளும் இடம் பெற்றுள்ளது. முந்தானையில் ஆதிகேசவன் மீது சயன கோலத்தில் படுத்திருக்கும் ரங்கநாதரும், காலடியில் வீற்றிருக்கும் மகாலட்சுமியும், நாபியில் இருந்து வளரும் தாமரை பூவில் பிரம்மாவும், ஸ்ரீரங்கநாதரின் உற்சவர் உருவமும் ஜரிகை இலைகளால் நெய்து சேலையை தயாரித்து உள்ளனர். இது குறித்து குமாரவேலு- கலையரசி தம்பதியினர் கூறியது, திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் நாங்கள் நெய்த புடவை இடம்பெறப்போவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக விரதம் இருந்து நெசவு செய்து வழங்கி உள்ளோம் என்று பெருமிதமாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |