திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி சுப்பாரெட்டி, அவரின் மனைவி சொர்ணலதா ரெட்டி இருவரும் திருப்பதி வெங்கடாசலர் கோவிலுக்கு 2 கிலோ 12 கிராம் 500 மில்லி கிராம் எடையில் தங்க கந்தாபாரணத்தை காணிக்கையாக அளித்துள்ளனர். திருமலையில் உள்ள தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் சீனிவாச விஸ்வசாந்தி மகா யாகம் வெற்றிகரமாக முடிந்ததை முன்னிட்டு அவர்கள் இந்த தங்க கந்தாபரணத்தை காணிக்கையாக அளித்துள்ளதாக கூறியுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
Categories