திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கடந்த 27-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 6-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கோவில் பின்புறம் இருக்கும் மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ளது. சுமார் 35 லட்சம் பக்தர்கள் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கிரிவலம் சென்றதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவிலில் இருக்கும் கல்யாண மண்டபத்தில் வைத்து உண்டியல் பணம் என்னும் பணி கோவில் இணை ஆணையர் அசோக் குமார் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 29 லட்சத்து 20 ஆயிரத்து 669 ரூபாய் பணம், 1478 கிராம் வெள்ளி, 228 கிராம் தங்கம் காணிக்கையாக பெறப்பட்டதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.