உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் தொழில் அதிபர் பியூஷ் ஜெயின் வசித்து வருகிறார். இவர் வாசனை திரவிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் பல தொழில்களையும் செய்து வருகிறார். இவர் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய அதிகாரிகள் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், கட்டிடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கான்பூரில் உள்ள பியூஷ் ஜெயினின் பங்களாவிலும், பீரோக்களிலும் பணம் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தொழிலதிபர் வீட்டில் பதுங்கிய ரூ.177.45 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வரி ஏய்ப்பு குறித்து இதுவரை கைது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.