நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.இதனையடுத்து இந்த தம்பதி தற்போது தாய்லாந்தில் ஹனிமூன் சென்றுள்ளது. இந்நிலையில் இவர்களின் சொத்து விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ 165 கோடி, விக்கியின் சொத்து மதிப்பு 50 கோடி என மொத்தம் 215 கோடி சொத்து மதிப்பை இவர்கள் கொண்டுள்ளனர். நயன்தாரா ஒரு படத்திற்கு 6.5 கோடி சம்பளம் வாங்குகிறார். விக்கி ஒரு படத்திற்கு ஒரு கோடி வரை சம்பளம் பெறுகிறார்.