மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி நல்லாட்சி தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேர்மையுடன் பணி செய்யாத 10 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு சட்டத்தின் படி ஓய்வு அளிக்க மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது உறங்கிய மூத்த பிஎஸ்என்எல் அதிகாரிக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ரயில் அமைச்சராகவும் இவர் உள்ளதால் ரயில்வே துறையில் நேர்மை இல்லாமல் பணி செய்த 40 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்துள்ளார்.