தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் மீண்டும் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் நேற்று காலை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. காலை முதலே மதுபிரியர்கள் டாஸ்மாக் முன்பு வரிசைகட்டி நின்று அதிகளவில் மதுவை வாங்கி சென்றனர். ஒரு சிலர் பல நாட்கள் கழித்து மதுவை பார்த்த சந்தோசத்தில் அதற்கு முத்தமிட்டு குடித்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.165 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.