Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. பண்டிகை காலத்தில் ஆம்னியின் டிக்கெட் விலை இவ்வளவா?….. அரசு நடவடிக்கை எடுக்குமா?…… வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயங்கிக்கொண்டு வருகிறது. இதனால் இரு பேருந்து சேவைகளிலும் கட்டணங்கள் ஏற்ற இறக்கமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் நேரம் செலவாகுதை தடுக்க மக்கள் அதிகம் தனியார் பேருந்துகளையே விரும்புகின்றார்கள். இதனால் தனியாள் பேருந்துகள் அவர்களாகவே கட்டணங்கள் நிர்ணயித்து, பண்டிகை காலங்களில் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பண்டிகை மற்றும் விசேஷ நாட்களை மையமாகக் கொண்ட ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதிக கட்டணங்களை வசூலிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

அதாவது ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய உரிமை மாநில அரசுகளுக்கு இல்லாததால் இத்தகைய ஆம்னி பேருந்துக்கள் அதிக கட்டணத்தை வருகின்றது. இதனையடுத்து தொடர்விடுமுறை தினங்களில் விமான சேவைக்கு இணையாக இந்த நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏசி வசதி இல்லாத சாதாரண பஸ்களில் இருக்கைக்கு ரூ.1300 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனைப் போல ஏசி படுக்கை வசதிக்கு ரூ.2000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சாதாரண நாட்களில் ரூ.800, ரூ.1500 என வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 750 ஆம்னி பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் சிறப்பு ஆய்வாளர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |