Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!….. பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி வென்ற ஆட்டோ டிரைவர்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

கேரளா மாநிலத்தில் லாட்டரி துறை சார்பில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி 2022 லாட்டரி முடிவுகள் நேற்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதில் ஓணம் பம்பர் 2022 அல்லது திருவோணம் பம்பர் முடிவுகள் கேரள மாநில லாட்டரி துறையில் வெளியானது. அதில் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டது.. இந்த ஆண்டு குழுக்களில் தேர்வானவர்களுக்கு ரூ.25 கோடி முதல் ரூ.1000 வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. அதில் முதல் பரிசாக ரூ.25 கோடி திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவருக்கு கிடைத்துள்ளது. 2 வது பரிசு ரூ.5 கோடி கோட்டையத்தை சேர்ந்த ஒருவருக்கு கிடைத்தது.

கேரளாவில் பம்பர் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைவரும் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. 32 வயது அனூபு, இந்த லாட்டரி டிக்கெடை திருவனந்தபுரத்தில் உள்ள பழங்கவாடி பகவதி ஏஜென்சி இந்த லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து உள்ளது. மேலும் 2 வது பரிசு ரூ.5 கோடி லாட்டரி டிக்கெட் கோட்டயத்தில் உள்ள மீனாட்சி லாட்டரி ஏஜென்சி விற்பனை செய்தது. இது குறித்து அனூப் கூறியது, நான் 22 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறேன். இந்த பணத்தை வைத்து முதலில் நான் வீடு கட்டுவேன். வரி தொகை போக மீதி ரூ.15.75 கோடி தொகை கிடைக்கும். மேலும் சென்ற ஆண்டும் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ.12 கோடி கிடைத்தது. இந்த ஆண்டும் ஆட்டோ டிரைவருக்கு பரிசு கிடைத்துள்ளதால் இந்த செய்தி கேரளா முழுவதும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

Categories

Tech |