Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! பழனி முருகன் கோவிலில்… எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை…. ரூ 2,71,95,310 வருவாய்…!!!

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ 2,71,95,310 வருவாய் கிடைத்தது.

முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவிலின் உண்டியலில் செலுத்துகிறார்கள். இந்த கோவில் உண்டியல் நிரம்பிய பிறகு கோவில் நிர்வாகம் சார்பாக அதிலுள்ள பணம் பொருள்கள் எல்லாம் எண்ணப்படுகிறது.

அதன்படி கடந்த மாதம் 25ம் தேதியன்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது. அதன்பின்  27 தினங்களுக்கு பிறகு நேற்று பழனி முருகன் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில்  கார்த்திகை மண்டபத்தில் வைத்து நடந்தது.

மேலும் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் என 150-க்கும் அதிகமானவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு உண்டியல் காணிக்கையை எண்ணி வருகின்றனர். இந்த கோவில் உண்டியலின் காணிக்கை மூலம் ரூ 2,71,95,310 வருவாய் கிடைத்துள்ளது.

மேலும் சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் கரன்சி நோட்டுகள் 111 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாது தங்கம், வெள்ளியாலான வேல், மோதிரம், கைவிலங்கு, சங்கிலி, தொட்டில், மயில், பாதம் உட்பட பல பொருட்களும் உண்டியலில் போடப்பட்டிருந்தன. இந்தப் பணி இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது.

Categories

Tech |