Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! பாம்பு போன்ற மீனை…. விழுங்க முயற்சிக்கும் மீன்…. வைரல் வீடியோ…!!

சிறிய மீன் ஒன்று பாம்பு போன்ற விலாங்கு மீனை விழுங்க முயற்சிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிறிய வகை மீன் ஒன்று விலாங்கு என்னும் ஒருவகை மீனை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த மீனை விட விலாங்கு மீன் பெரிதாக இருப்பதால் விழுங்க முடியாமல் மீண்டும் அதை வெளி யே கக்கியுள்ளது. இதையடுத்து வெளிய வந்த அந்த மீன் அங்கிருந்து தப்பித்து ஓடுகிறது.

இதை பதிவிட்ட சுசாந்தா நந்தா என்ற ஐஎப்எஸ் அதிகாரி “இயற்கையின் அற்புதமான தருணங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்ப்பவர்கள்  மீனா? பம்பா? என்று தெரியவில்லை என்று வியப்பில் மூழ்கினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |