பிரபல நாட்டில் வேலை பார்க்கும் இந்திய வாலிபருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
துபாயில் உள்ள ஒரு நகைக்கடை நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த அஜய் ஓகுலா என்பவர் வேலை பார்த்து வருகிறார் . இவர் லாட்டரி சீட்டுகளை வாங்குவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் வாங்கிய லாட்டரி மூலம் 33 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, “எனக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்ததை என்னால் நம்ப முடியவில்லை.
இதன் மூலம் நான் கோடீஸ்வரனான செய்தியை இந்தியாவில் உள்ள எனது குடும்பத்தினருக்கு தெரிவித்தேன். அவர்களும் அதனை நம்பவில்லை. மேலும் இந்த தொகையில் ஒரு அறக்கட்டளையை உருவாக்குவேன். இந்த பணம் எனது சொந்த ஊர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்” என அவர் கூறியுள்ளார்.