மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தென்னிந்திய திரையுலகின் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவர். இவர் நடிக்க தொடங்கிய காலங்களில் இருந்து வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தடுமாறி வந்தவர் தற்போது விஜய், பிரபாஸ் என முன்னணி நட்சத்திரங்களுடன் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவே இவரின் இரண்டாவது தமிழ் திரைப்படமாகும். இப்படத்தில் நடிப்பதற்காக பூஜா ஹெக்டே 3.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். இதுவே அவரின் அதிக சம்பளம் என திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது.