Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா!…. பேருந்து நிலையத்தில் செஸ் போர்டு போன்று அலங்கரிப்பு…. செல்பி எடுத்த மக்கள்….!!!!

சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்கள் இடையே பிரபலப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கோவை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களை கவரும் வகையில் 10 பேருந்து நிலையங்களில் தேர்வு செய்து அதனை செஸ் போர்டு போன்ற அலங்கரிக்க திட்டமிட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக கோவை லட்சுமி மில் பேருந்து நிலையத்தில் செஸ்போர்டில் இருப்பதை போல கருப்பு, வெள்ளை கட்டங்கள் போல அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் ஏராளமானோர் இந்த பஸ் நிறுத்த முன் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். அதனைப் போல கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் சமீரன் திறந்து வைத்து செல்பி எடுத்துக் கொண்டார்.

Categories

Tech |