தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், சபாபதி, டிக்கிலோனா, தில்லுக்கு துட்டு போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் தற்போது கிக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சந்தானம் சமீபத்தில் புலி வாலை பிடித்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் புலியை நடிகர் சந்தானம் கொடுமைப்படுத்துவதாக கூறி கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சென்னையில் பெரும்பாலான விஐபிகள் வசிக்கும் போயஸ் கார்டனில் நடிகர் சந்தானம் பிரம்மாண்ட பங்களா வீட்டை வாங்கியுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினி போயஸ் கார்டனில் வசித்து வரும் நிலையில் தனுஷ் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறார். அதன் பிறகு நடிகை நயன்தாரா, விஜய் ஆண்டனி மற்றும் இயக்குனர் அட்லி போன்றோருக்கும் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் நடிகர் சந்தானமும் தற்போது இணைந்துள்ளார். போயஸ் கார்டனில் ஏலத்துக்கு வந்த ஒரு வீட்டை பல கோடி ரூபாய் கொடுத்து நடிகர் சந்தானம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் சந்தானத்துக்கு ஈசிஆர் பகுதியில் ஏற்கனவே ஒரு பிரம்மாண்ட வீடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.