மோடி மீண்டும் பிரதமராக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டப்பம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 2024 -ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த பூஜையில் மிஷன் மோடி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, அகில பாரத பொதுச் செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் 6 பசு மாடுகளுக்கு கோ பூஜை நடைபெற்றுள்ளது. இந்த பூஜையில் பசு மாடுகள் மற்றும் அதன் கன்று குட்டிகளுக்கு பல்வேறு வேத மந்திரங்கள் ஓதி அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.