மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாதம் ஒரு முறை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உப கோவில்களில் இருக்கும் உண்டியல்கள் எண்ணப்படுவது வழக்கம். நேற்று மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் பழைய திருக்கல்யாணம் மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கையை எண்ணியுள்ளனர். இந்த பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதில் காணிக்கையாக 1 கோடியே 4 லட்சத்து 37 ஆயிரத்து 557 ரூபாயும், 6 கிலோ 576 கிராம் வெள்ளி 544 கிராம் வெள்ளி, 544 கிராம் தங்கம் ஆகியவை கிடைக்க பெற்றது.
Categories