ஸ்வீடன் நாட்டின் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்தாண்டில் உலக நாடுகளின் பாதுகாப்புத் துறை செலவு 2.1 லட்சம் கோடி டாலரை தாண்டியுள்ளது.
ஸ்வீடன் நாட்டின் பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்தாண்டு உலக நாடுகளின் பாதுகாப்பு துறை செலவு 2.1 லட்சம் கோடி டாலரை தாண்டியுள்ளது. இது இந்திய மதிப்பீட்டின்படி 162 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இது குறித்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த கொரோனா காலகட்டத்திலும் கூட உலக நாடுகளின் பாதுகாப்பு துறைக்கான செலவு 0.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியா, சீனா, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் பாதுகாப்பு துறைக்காக அதிக தொகை செலவழிப்பதில் முதலிடத்தில் வகிக்கிறது.