Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…. ரஷ்யா அதிபருக்கு இப்படி ஒரு பாதுகாப்பா?…. நிழலை கூட யாரும் நெருங்க முடியாது….!!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு ஆபத்து அதிகமாக இருப்பதால் அவரது பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் எந்த இடத்திற்குச் சென்றாலும் 4 அடுக்கு பாதுகாப்பு இருக்குமாம். முதல் அடுக்கு பாதுகாப்பில் அவரைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் உடன் இருப்பார்கள். அவர் இருக்கக்கூடிய இடத்தில் ஏதாவது ஆபத்து என்றால் அந்த பாதுகாவலர்கள் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் அதிபரின் உயிரை காப்பாற்றுவார்கள். இரண்டாவது அடுக்கு பாதுகாப்பில் இருப்பவர்கள் தங்களை தவிர வேறு யாரையும் அதிபரின் அருகில் நெருங்க விட மாட்டார்கள். ஒருவேளை யாராவது அதிபரை சந்திக்க வந்தால் கூட அவர்களை முழுமையாக சோதனையிட்ட பிறகுதான் அதிபரை சந்திக்க அனுப்புவார்கள்.

எந்த ஒரு உரையாடலையும் அதிபருடன் நேரடியாக வைத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். மூன்றாவது அடுக்கு பாதுகாப்பில் சில காவலாளிகள் மக்களுடன் மக்களாக யாரென்றே தெரியாத அளவிற்கு இருப்பார்கள். அவர்கள் சந்தேகப்படும்படி யாராவது ஒரு நபரை பார்த்தால் உடனே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு முழுமையாக அவரை சோதனை இடுவார்கள். எந்த நேரமும் தங்களைச் சுற்றி இருப்பவர்களை அவர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.

நான்காவது அடுக்கு பாதுகாப்பில் இருக்கும் காவலாளிகள் தூரத்தில் உயரமான இடத்தில் துப்பாக்கியுடன் இருப்பார்கள். யாராவது அதிபரை அனுமதி இல்லாமல் உடனடியாக நெருங்கினால் அவர்களை கண்காணித்து தூரத்திலிருந்து குறிபார்த்து சுட்டு விடுவார்கள். இப்படி அதிபரை சுற்றி எந்த நேரமும் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் காவலாளிகள் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏற்கனவே 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதிபருக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Categories

Tech |