Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!!…. ராணி இரண்டாம் எலிசபெத்தின் திருமண புகைப்படத்தில் உள்ள தவறு…. என்னனு நீங்களே பாருங்க…..!!!!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் திருமண புகைப்படத்தில் ஒரு தவறு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின்  மகாராணியான  இரண்டாம் எலிசபெத் சில  மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த 1947 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி இளவரசர் பிலிப்பை  திருமணம் செய்தார். ஆனால் இன்று வரை அவரது திருமணம் குறித்து பேசப்படுகிறது. மேலும் அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.இந்நிலையில் மகாராணியாரின் திருமண புகைப்படத்தில்  குறிப்பாக முழு குடும்பமாக நின்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் போது மகாராணியார் தனது மலர்ச்செண்டை தவற விட்டு விட்டார். அதனை எந்த புகைப்படத்தில் கவனித்தால் தெரியும்.

இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டதும், அதை சரி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மகாராணியாரும்  இளவரசரும்  தேனிலவுக்கு சென்ற போது அங்கு வைத்து மீண்டும் தம்பதியருக்கு திருமண உடைகள் அணிவிக்கப்பட்டு 2-வது முறை புகைப்படம் எடுக்கப்பட்டதாம். அந்த புகைப்படத்தில் மகாராணியாருக்கு கையில் மலர்ச்செண்டு  இருந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் இப்படி ஒரு தவறு நிகழக் கூடாது என்பதற்காக இனி ராஜ குடும்பத்தில் எந்த திருமணம் நிகழ்ந்தாலும் மணமகளுக்கான இரண்டு மலர்ச்செண்டுகள் தயாரித்து வைத்திருப்பது என அந்த காலகட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ராஜ குடும்பங்களுக்கு மலர் அலங்காரம் செய்பவரான David longman என்பவர் கூறியுள்ளார்.

Categories

Tech |