நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு OTT-யில் வெளியான சூர்யாவின் “சூரரைப்போற்று” படம் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ஆகும். மேலும் இளைஞன் ஒருவன் சாமானிய மக்களுக்கு விமான பயணத்தை ஒரு ரூபாய்க்கு கொடுக்க போராடும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் சதிகள் ஆகியவற்றை கடந்து அந்த இளைஞன் எவ்வாறு சாதிக்கிறார் என்பதை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் ஊர்வசி, கருணாஸ், சூர்யா, அபர்னா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் “சூரரைப்போற்று” படத்தில் சூர்யா நடித்தது போல ஹிந்தியில் பிரபல நடிகரான அக்ஷய் குமாரை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அக்ஷய் குமார் சம்பளமாக ரூபாய் 30 கோடி கேட்டுள்ளார். இதனால் ஷாகித் கபூரை ஹீரோவாக நடிக்க வைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.