கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஊர்வலங்கள் வார இறுதியான செப்டம்பர் 3 மற்றும் நான்காம் தேதிகளில் கோலாகலமாக விநாயகர் சிலைகள் கடற்கரையில் கரைக்கப்படவுள்ளன.
இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் நகரமான காஞ்சி மாநகரிலுள்ள ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனைகள் நடைபெற்று 1ரூபாய்,2ரூபாய், 5ரூபாய், 10ரூபாய், 20ரூபாய்,50ரூபாய், 100ரூபாய், 200ரூபாய், 500ரூபாய், 2000ரூபாய் ஆகிய புதிய ரூபாய் நோட்டுகள் என ரூ.15 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் கோயில் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகரை ஏராளமான பகதர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.